சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

மூன்றாம் ஆயிரம்   பூதத்தாழ்வார்  
இரண்டாம் திருவந்தாதி  

Songs from 2182.0 to 2281.0   ( மாமல்லபுரம் )
Pages:    Previous   1  2  3  4  5    6  Next
நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் ஆர்ந்த
அடிக் கோலம் கண்டவர்க்கு என்கொலோ முன்னைப்
படிக் கோலம் கண்ட பகல்?



[2261.0]
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு



[2262.0]
வடிக் கோல வாள் நெடுங் கண் மா மலராள் செவ்விப்
படிக் கோலம் கண்டு அகலாள் பல்நாள் அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்கொலோ?
கோலத்தால் இல்லை குறை



[2263.0]
குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை ஆங்கு என உரைத்த மாலை இறையேனும்
ஈயும்கொல் என்றே இருந்தேன் எனைப் பகலும்
மாயன்கண் சென்ற வரம்



[2264.0]
வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருதி மூர்க்கத்தவனை நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அம் கண் மா ஞாலத்து அமுது



[2265.0]
Back to Top
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன
சொல் மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நல் மாலை ஏத்தி நவின்று



[2266.0]
நவின்று உரைத்த நாவலர்கள் நாள் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்? பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பு அரிய மேக மணி வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பன்கொல் இன்று?



[2267.0]
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று
கருக்கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருக்கோட்டி எந்தை திறம்



[2268.0]
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை
திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால் திறம்பாச்
செடி நரகை நீக்கி தாம் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசல் கதவு



[2269.0]
கதவி கதம் சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவி போர் யானை ஒசித்து பதவியாய்ப்
பாணியால் நீர் ஏற்று பண்டு ஒருகால் மாவலியை
மாணியாய்க் கொண்டிலையே மண்?



[2270.0]
Back to Top
மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானை கைதொழுத பின்



[2271.0]
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ பல் நூல்
அளந்தானை கார்க் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி



[2272.0]
அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடிமேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது



[2273.0]
கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்று அது கூடாமுன்னம் வடி சங்கம்
கொண்டானை கூந்தல் வாய் கீண்டானை கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று



[2274.0]
உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பற்றிப்
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு



[2275.0]
Back to Top
என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை
வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான்



[2276.0]
அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின்மேல் துயில்வான் முத்தீ
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான்



[2277.0]
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடு மால் திருமார்பா பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பு அணைமேல் சேர்ந்தாய்
குடமூக்குக் கோயிலாக் கொண்டு



[2278.0]
கொண்டு வளர்க்க குழவியாய்த் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க கொண்டு
குடம் ஆடி கோவலனாய் மேவி என் நெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை



[2279.0]
இறை எம் பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய்ம் மலர்கள் தூவ அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறள் உருவாய்
மாவடிவின் மண் கொண்டான் மால்



[2280.0]
Back to Top


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song